பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் கவர்னர்கள் மத்திய அரசின் ஏஜெண்டாக பணிபுரிந்து வருவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக கவர்னரும் புதுவை கவர்னரும் பாஜகவின் கைப்பாவைகள் என்று கூறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை கவர்னரின் கையில் இருந்து அதுகுறித்து முடிவெடுக்காமல் கவர்னர் காலந்தாழ்த்தி வருவதை எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய உடனே கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் கவர்னர் மாற்றப்படுவார் என்றும் வைகோ கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலும் கவர்னரை நியமனம் செய்வது மத்திய அரசுதான். மத்தியில் உள்ள அரசு நினைத்தால் மட்டுமே கவர்னர் மாற்றப்பட முடியும் என்று நெட்டிசன்கள் வைகோவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.