2.0 படம் செல்போன் கதிர்களால் பறவை இனம் எப்படி அழிகிறது என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், படத்தில் கூறப்பட்டது எந்தனை பேர் மத்தியில் தாக்கத்தி ஏற்படுத்தியது என்பது கேள்விக்குறியே.
இந்நிலையில் நெதர்லாந்தில் 2.0 படத்தில் கூறப்பட்டது செல்போன் கதிர்களால் பறவைகள் பல இறந்துள்ளன. ஆம், 5ஜி சேவைக்கான சோதனையின் போதுதான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
உலகம் முழுவதும் தற்போது 4ஜி செல்போன் செயல்பாட்டில் உள்ளது. அடுத்து 5ஜி சேவைகள் குறித்த சோதனைகள் நடைபெற்ற வருகிறது. அப்படித்தான், நெதர்லாந்து நாட்டின் மேற்கே உள்ள தி ஹேக் நகரில் 5ஜி சேவைக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது 150-க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்த விழுந்தனவாம். சில பறவைகள் தலையை தண்ணீருக்குள் விட்டுக் கொண்டன. எண்ணிக்கையின் படி 297 பறவைகள் இறந்துள்ளன.
5ஜி சோதனை நடத்தப்பட்டதால் அதன் கதிர்வீச்சை எதிர்கொள்ளாமல் பறவைகள் இறந்துள்ள என வாய் மொழியாக செய்திகள் கூறினாலும் இவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, 5ஜி சோதனைகள் தடைப்படபோவதும் இல்லை.