Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருணாநிதியின் ராஜதந்திரத்தை பின்பற்றும் துரைமுருகன்: ஒரே பேட்டியில் எல்லோரும் ஆஃப்!

Advertiesment
கருணாநிதியின் ராஜதந்திரத்தை பின்பற்றும் துரைமுருகன்: ஒரே பேட்டியில் எல்லோரும் ஆஃப்!
, சனி, 1 டிசம்பர் 2018 (13:49 IST)
திமுக பொருளாளர் துரைமுருகன் கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்பட எந்த கட்சியும் திமுகவுடன் இப்போதைக்கு தேர்தல் கூட்டணியில் இல்லை என்று கூறியிருந்தார். 
 
இவரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதோடு வைகோ, திருமாவளவன் ஆகியோரை கதிகலங்க செய்தது. இதனால், இவர்கள் இருவரும் தனித்தனியாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்.
 
சந்திப்புக்கு பின்னர் திருமாவளவன், கூட்டணியை பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்பதைதான் துரைமுருகன் அவ்வாறு கூறியிருந்தார் என பேட்டி அளித்தார். 
 
அதேபோல் வைகோ, துரைமுருகன் கூறிய கருத்தால் மதிமுகவினர் காயமடைந்துள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்தார். இனி கூட்டணி குறித்த முடிவுகளை ஸ்டாலின் அறிவிக்கக்கட்டும் என்றும் குறிப்பிட்டார். 
webdunia
இவை அனைத்தும் வெளி உலகத்திற்கு தெரிந்த ஒன்றாக இருந்தாலும், துரைமுருகனின் இந்த அறிவிப்பிற்கு பின்னாள் இருந்த விவகாரம் தற்போது தெரியவந்துள்ளது. 
 
லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன் என்று திருமாவளவன் அளித்த பேட்டி, துரைமுருகனை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. அதோடு, வைகோ தனக்கு நான்கு தொகுதிகள் வேண்டும் என்று கேட்டிருந்தாராம். 
 
இதையெல்லாம் கவனித்து வந்த துரைமுருகன் இவர்களின் பேச்சுக்களை கட்டுப்படுத்த கூட்டணி இல்லை என தடாலடியாக அறிவித்த பின்னர் திருமாவளவனும், வைகோவும் ஸ்டாலினை சந்தித்து அடிப்பணிந்தனர் என நெருங்கிய வட்டார தகவல் தெரிவிக்கின்றன. 
 
என்ன இருந்தாலும், கருணாநிதியின் கெத்து, துரைமுருகனிடமும் இருக்கும் அல்லவா என திமுக சீனியர் தொண்டர்கள் இந்த விவகராத்தை புகழ்ந்து பேசி வருகின்றனராம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூளையில் கோளாறுள்ள கமல்ஹாசன்: தெர்மாகோல் அமைச்சர் கடுகடு