Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக கூட்டணி என்ற நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்துவிட்டது: அமைச்சர் ஜெயகுமார்

Advertiesment
திமுக கூட்டணி என்ற நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்துவிட்டது: அமைச்சர் ஜெயகுமார்
, ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (22:27 IST)
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று திமுக முடிவு செய்துவிட்டது. எனவே காங்கிரஸ் தவிர மற்ற கூட்டணி கட்சிகளை ஒதுக்க முடிவு செய்துவிட்டதாகவும், சட்டமன்ற தேர்தலின்போது மற்ற கட்சிகளை கூட்டணியில் இணைத்து கொள்ளலாம் என்றும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே தான் முதல்கட்டமாக விசிக, மதிமுக கூட்டணியில் இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். அதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை திருமாவளவன், வைகோ போன்றவர்கள் நேரில் சந்தித்தபோதும், திமுக கூட்டணியில் இந்த இரண்டு கட்சிகளும் இருப்பதாக ஸ்டாலின் இந்த நிமிடம் வரை கூறவில்லை

webdunia
இந்த நிலையில் திமுக கூட்டணி என்ற நெல்லிக்காய் மூட்டை தற்போது அவிழ்ந்துவிட்டதாகவும், அதில் உள்ள எல்லோரும் உருண்டு ஓடிவிடுவார்கள் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும்  வைகோ, திருமாவளவன் தன்மானம் உள்ளவர்கள் எனவும் கூறிய அமைச்சர் ஜெயக்குமார்
ரஜினி, பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை எனவும் கூட்டணி குறித்த தங்கள் நிலைப்பாட்டை தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயிரற்ற சிலைக்கு ரூ.3000 கோடி, உயிருள்ள டெல்டா தமிழர்களுக்கு ரூ.350 கோடியா? கனிமொழி எம்பி ஆதங்கம்