Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளிக் கல்வித்துறையில் வேலைவாய்ப்பு – லிங்க் உள்ளே..

Advertiesment
பள்ளிக் கல்வித்துறையில் வேலைவாய்ப்பு – லிங்க் உள்ளே..
, புதன், 12 டிசம்பர் 2018 (09:11 IST)
பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 20 பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதுகலைப் பட்டதாரிகள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டு அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. அண்மையில் குரூப் 2 தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அதையடுத்து தற்போது பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள 20 மாவட்டக் கல்வி அலுவலர் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேனிலைக் கல்வி வரைத் தமிழை முதன்மைப் பாடமாகக் கொண்டு படித்து, இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலை முடித்த பட்டதாரிகள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும் . தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் கடைசி நாள் அடுத்தாண்டு ஜனவரி 9 ஆகும். கட்டணம் கட்ட கடைசி தேதி ஜனவரி 11 ஆகும். (தேர்வுக்கட்டணம் 300 ரூ, பதிவுக் கட்டணம் -150 ரூ). 30 முதல் 40 வயது வரையுள்ள அனைத்து பட்டதாரிகளும் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு மார்சி மாதம் 2 ஆம் தேதி நடைபெறும். இப்பணிக்கான ஊதியமாக ரூ 56,900 முதல் 180500 வரை வழங்கப்படும்.

விண்ணப்பத்திற்கான லிங்க்
http://www.tnpsc.gov.in/notifications/2018_37_notyfn_DEO.pdf

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரையிறுதிலேயே காணாமல் போனது பாஜக: மம்தா பானர்ஜி