9351 பணியிடங்களுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள்
, புதன், 13 டிசம்பர் 2017 (08:10 IST)
டிஎன்பிஎஸ்சி(TNPSC) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியாகிய நிலையில், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(13-12-2017) கடைசி நாள்.
வெறும் 9351 பணியிடங்களுக்கு இதுவரை 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று இரவு 11.59 மணி வரை இத்தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
எப்படியாவது இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் என பலர் கஷ்டப்பட்டு படித்து வருகின்றனர். தேர்வில் பங்குபெறும் அனைத்து சகோதர சகோதரிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
அடுத்த கட்டுரையில்