Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையில் வேலை வாய்ப்புகள் – லிங்க் உள்ளே

Advertiesment
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையில் வேலை வாய்ப்புகள் – லிங்க் உள்ளே
, செவ்வாய், 11 டிசம்பர் 2018 (09:31 IST)
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையில் காலியாக உள்ள 6 பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்பி தேர்வுகளை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டு அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. அண்மையில் குரூப் 2 தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அதையடுத்து தற்போது தொழிலாளர் நலத்துறைக்கான தேர்வுகளை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை மதுரைப் பிரிவில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியாக உள்ள 6 பணியிடங்களுக்கான தேர்விற்கு வரும் டிசம்பர் 28 ஆம தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். 18 வயதுப் பூர்த்தியான அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான ஊதியமாக ரூ 15700 முதல் ரூ 50000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பத்திற்கான லிங்க்
https://drive.google.com/file/d/1pYMuuA7ajNSgWfME48m7jR4rlKolJckH/view

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்று மாநிலங்களில் முன்னிலையில் காங்கிரஸ் –தேர்தல் முடிவு அப்டேட்