Publish Date: Tue, 11 Dec 2018 (22:38 IST)
Updated Date: Tue, 11 Dec 2018 (22:40 IST)
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளின்படி பாஜகவின் அரசியல் பின்னடைவு வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது. பாஜகவின் கோட்டை என்று கருதப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்திலேயே காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிவிட்டதால் மோடியின் அலை ஓய்ந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் பாஜகவின் தோல்வி குறித்து ஏற்கனவே கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கருத்து தெரிவித்துவிட்ட நிலையில் தற்போது நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்ததுதான் பாஜகவின் பின்னடைவுக்கு காரணம் என்றும், மக்களின் மனதில் இருந்த முடிவுகள்தான் தற்போது தேர்தல் முடிவாக வந்துள்ளதாகவும் விஷால் தெரிவித்துள்ளார். விஷாலின் கருத்துக்கு நெட்டிசன்களின் ஆதரவு குவிந்து வருகிறது.