Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்கா புறப்பட ரெடியா? 8 லட்சம் விசாக்கள் தயார்! – சென்னை தூதரகம் தகவல்!

Advertiesment
visa
, புதன், 20 ஏப்ரல் 2022 (08:54 IST)
கொரோனா காரணமாக அமெரிக்கா செல்ல விசா அளிப்பது தடைப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக பல ஆயிரம் மக்கள் அமெரிக்கா செல்வது வழக்கமாக உள்ளது. கொரோனாவிற்கு முந்தைய காலத்தில் ஆண்டுக்கு 12 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனாவால் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமெரிக்க தூதரக விவகாரங்கள் ஆலோசகர் டொனால்டு ஹப்ளின், அமெரிக்கா செல்ல இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்கப்பட உள்ளதாகவும், ஐடி கம்பெனிகள் மூலம் அமெரிக்கா செல்பவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதலாகவும், மாணவர்களுக்கு மே மாதம் முதலாகவும் நேர்க்காணல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்னரை எதிர்க்கணும்னா இப்படியா பண்றது? – கார்த்திக் சிதம்பரம் கண்டனம்!