சமீபகாலமாக துபாய் அரசு கோல்டன் விசா என்ற சிறப்பு விசாவை உருவாக்கி பிரபலங்களுக்கு கொடுத்து வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இதையடுத்து இப்போது இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களுக்கு கோல்டன் விசா எனும் சிறப்பு விசாவை வழங்கி வருகிறது. இந்த விசாவைப் பெறுபவர்கள் 10 ஆண்டுகள் எப்போது வேண்டுமானாலும் துபாய்க்கு சென்றுவரலாம். வேறு எந்த விசாவும் எடுக்க தேவையில்லை.
இந்த விசா இப்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த சினிமாக் கலைஞர்கள் பலருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், த்ரிஷா, காஜல் அகர்வால், பார்த்திபன், பாடகி சித்ரா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இப்போது இந்த பட்டியலில் நடிகை ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளார். அவர் தான் கோல்டன் விசா பெறும் புகைப்படத்தை பகிரவே அது இப்போது வைரலாகி வருகிறது.