Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

Advertiesment
எடப்பாடி பழனிசாமி

Mahendran

, திங்கள், 14 ஜூலை 2025 (13:32 IST)
லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில் முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மீனாவிற்கு அரசு வேலை வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில், இதுவரையில் மீனாவுக்கான அரசு வேலையோ, இழப்பீடோ திமுக அரசால் வழங்கப்படவில்லை என செய்திகள் வருகின்றன.
 
திரு. ஸ்டாலின் அவர்களே நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருக்கும் உங்கள் அரசால், உங்கள் காவல்துறையால் தனது கணவனை இழந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண், 300 ரூபாய் கூலிக்கு வேலை செய்துக் கொண்டிருக்கிறார். மீனாவுக்கு உங்களிடம் இருந்து பதில் வருமா பொம்மை முதல்வரே?
 
திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கும் நீங்கள் அவசர கதியில் கொடுத்த வேலை மற்றும் நிலம், தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்று அவரின் குடும்பத்தார் தெரிவித்து வருகின்றனர்.
 
லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும் மனமில்லை! 
 
இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி?
 
லாக்கப் மரணங்களால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான உரிய இழப்பீடுகளை உடனே வழங்கிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவது ஏன்? எப்படி நடக்கும்? ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விளக்கம்..!