மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், பாஜக ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறும் என்று தெரிவித்திருந்த நிலையில், இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பதிலளித்துள்ளார். "தமிழ்நாட்டில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அமித்ஷா அளித்த விரிவான நேர்காணலில், "தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், அவ்வாறு வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்குபெறும்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எடப்பாடி பழனிசாமி, "நான்தான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்று ஆணித்தரமாகக் கூறினார்.