Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு: கௌசல்யாவின் தாய், தந்தை விடுதலை

Advertiesment
உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு:  கௌசல்யாவின் தாய், தந்தை விடுதலை
, திங்கள், 22 ஜூன் 2020 (11:44 IST)
தமிழகத்தையே பெரும் பரபரப்புக்கு உள்ளாகிய உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு சற்று முன் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டை சங்கர், கௌசல்யா என்ற கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொண்டார். சாதி மாறி செய்த இந்த திருமணத்திற்கு கௌசல்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கௌசல்யாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் கௌசல்யாவின் தந்தையும் அவருடைய உறவினரும் உடுமலைப்பேட்டை சங்கரை கடந்த 2016 ஆம் ஆண்டு பேருந்து நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு. இந்த தாக்குதல் சம்பவத்தில் கௌசல்யாவுக்கு படுகாயம் ஏற்பட்டது 
 
இந்த வழக்கின் தீர்ப்பில் கௌசல்யாவின் தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அது மட்டுமின்றி மேலும் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கௌசல்யாவின் உள்பட தூக்கு தண்டனை பெற்ற அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்
 
இந்த மேல்முறையீட்டு வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் கௌசல்யாவின் தந்தைக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனையை ரத்து செய்யப்பட்டு, அவர் விடுதலை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
அதேபோல் கௌசல்யாவின் தாய் உட்பட 3 பேர் விடுதலையை எதிர்த்து காவல்துறையினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் தீர்ப்பு கௌசல்யா தரப்பிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் கௌசல்யாவின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா - சீனா எல்லை சிக்கல்: லே, லடாக் பகுதியில் தற்போது என்ன நிலவரம்?