Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வு: வடகிழக்குப் பருவமழை தீவிரம்

Advertiesment
வங்கக்கடல்

Mahendran

, வெள்ளி, 7 நவம்பர் 2025 (15:25 IST)
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வங்கக்கடல் பகுதியில் தொடர்ச்சியாக இரண்டு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழகத்தில் அக்டோபர் 16-ல் தொடங்கிய பருவமழையை தொடர்ந்து, ஒரு காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது; மற்றொன்று 'மோந்தா' புயலாக ஆந்திராவில் கரையைக் கடந்தது.
 
தற்போது, நவம்பர் மாதத்தில் மழை தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது: முதல் தாழ்வு நவம்பர் 14-ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிறது. இரண்டாவது தாழ்வு நவம்பர் 19-ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றுமொரு தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
 
இந்த அடுத்தடுத்த வானிலை மாற்றங்களால், வரும் நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே மனசாட்சி அரசியல் செய்யாமல் போய்விடுங்கள்: குஷ்பு