தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று தமிழக பாஜக மாநிலத் துணை தலைவர் குஷ்பூ சுந்தர் விமர்சித்துள்ளார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 65% அதிகரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் பாஜக மகளிர் அணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, "தமிழகத்தில் எந்தத் தாயும் தனது பெண் குழந்தை வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பி வரும் வரை பயத்துடன்தான் இருக்கிறார்" என்று வேதனை தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே மனசாட்சி இருந்தால், அரசியலே செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு போக வேண்டும். அதுதான் உங்களுக்கு அழகு" என்று அவர் ஆவேசமாகக் கூறினார். பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் குஷ்பூ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.