தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி வழங்க கோரிச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை பாரபட்சம் இல்லாமல் பரிசீலிக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்றும், நீதிமன்றம் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. ஆனால், நீதிபதி நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
எனவே, நாளை விசாரணை நடைபெறும் என்றும், விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு விஜய்யின் பிரசார பயணத்திற்கு வழிகாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.