தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் மாநாட்டு இன்று மாலை நடைபெறாவிருக்கும் நிலையில், 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் நிலவியதால், தொண்டர்கள் அவதிக்குள்ளாகினர். வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க, ட்ரோன்கள் மூலம் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டன.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி கிராமத்தில் அமைக்கப்பட்ட 506 ஏக்கர் பரப்பளவிலான மாநாட்டு திடலில், மாநாட்டிற்கான இருக்கைகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
நேற்று நள்ளிரவு முதல் தொண்டர்கள் அலை அலையாக திரண்டனர். காலை 10 மணியளவில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி வழிந்தன. கடுமையான வெப்பம் காரணமாக தொண்டர்கள் தரை விரிப்புகளை கிழித்து, தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்களை காத்துக்கொண்டனர். சிலர் இருக்கைகளை நிழற்குடைபோல் பயன்படுத்தினர்.
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால், 10-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மயக்கமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனை சமாளிக்க, டிரோன்கள் மூலம் குடிநீர் பாட்டில்கள் மற்றும் முதலுதவி பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. கட்சித் தலைவர் விஜய், குழந்தைகளுடன் மாநாட்டிற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியும், பலர் தங்கள் குழந்தைகளுடன் வந்து சிரமப்பட்டனர்.