ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் பதவி ஏற்றுக்கொண்டார்.
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40, 707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல், திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்துள்ளார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் தலைமை செயலகம் வந்தார். அதன்பின், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற சான்றிதழை சபாநாயகர் தனபாலிடம் அவர் வழங்கினார்.
பேரவை தலைவர் அறையில் சபாநாயகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் வெற்றிவேல், செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், தலைமை செயலகம் முழுவதும் தினகரனின் ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.