ஆர்கே நகர் இடைத்தேர்தல் வெற்றிக்கு பின்னர் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆசிபெற நேற்று பெங்களூர் சென்றார் டிடிவி தினகரன். இந்த சந்திப்பின் போது சசிகலா தினகரனிடம் கடுமையான கோபத்தை காட்டியதாக கூறப்படுகிறது.
ஆர்கே நகர் தேர்தலுக்கு முன்னர் டிடிவி தினகரன் ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ள வீடியோவை வெளியிட்டார். அதன் பின்னர் தினகரன் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். ஆனால் இந்த வீடியோ வெளியானது சசிகலா குடும்பத்தில் பூகம்பமாக வெடித்தது.
இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா தினகரனுக்கு எதிராக செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தினார். இந்நிலையில் சிறையில் இருக்கும் சசிகலா தினகரன் மீது கடுமையான கோபத்தில் இருந்தார். தினகரனின் வெற்றியை கூட அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.
இந்நிலையில் கோபத்தில் இருக்கும் சசிகலாவை சமாதனப்படுத்தவும், தேர்தல் வெற்றியை சொல்லவும் சிறைக்கு சென்றார் தினகரன். இந்த சந்திப்பு நேற்று நடந்தது, அப்போது சசிகலா மிகவும் கோபமாக தினகரனிடம் எதுவும் பேசாமல் இருந்துள்ளார்.
தினகரன் அந்த வீடியோ விவகாரம் குறித்து எவ்வளவோ விளக்கம் கொடுத்தும் சசிகலா வாய் திறக்காமல் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இருந்துள்ளார். இறுதியாக சமாதான முயற்சி கைகொடுக்காமல் வெளியே கிளம்பும் போது இந்த வெற்றி உங்களுடைய வெற்றி, உங்களால் கிடைத்த வெற்றி என தினகரன் கூற சசிகலா முகத்தில் அப்படியொரு கோபம் தெறித்திருக்கிறது. கடைசி வரை எந்த பதிலும் கூறாமல் சசிகலா கோபத்துடன் அந்த இடத்தை விட்டு விறுவிறுவென வெளியேறியிருக்கிறார்.