வரும் தேர்தலுக்கு முன்போ, பின்போ ஜனநாயக முறையில் போராடி அதிமுகவை மீட்டெப்போம் என டிடிவி பேட்டி.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலை ஆன நிலையில் அவர் தற்போது சென்னை திரும்பியுள்ளார். இதனை அடுத்து அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் பலரும் முதல்வரும், சசிகலா மற்றும் தினகரன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
சசிகலா வந்ததில் இருந்து அதிமுகவை மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் கூறிவரும் நிலையில் தனது சமீபத்திய பேட்டியில், அமமுக என்ற இயக்கத்தை நாம் எதற்காக ஆரம்பித்தோம் என்பதை சில கோமாளிகளுக்கு நன்றாக புரியும். இந்த ஆட்சி அதிகாரம் நாம் கொடுத்தது.
இந்த ஆட்சி எப்படி அமைந்தது என 5 வயது குழந்தையை கேட்டால் கூட தெரியும். அதிமுகவில் சசிகலாவை 100 சதவீதம் சேர்க்கமாட்டோம் எனவும், டிடிவி.தினகரன் தனிமரம் என கூறுகிறார்கள். இந்த தனிமரத்துக்கு எத்தனை ஆணிவேர் உள்ளது என பெங்களூரிலிருந்து சென்னை வரை பார்த்தீர்களா.
இவர்களது அதிகாரம் எல்லாம், இன்னும் 10, 15 தினங்களில் மாறிவிடும். மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி அறிவித்தால் தெரிந்துவிடும். அதிமுக ஜனநாயக வழியில் மீட்டெடுக்கப்படும். வரும் தேர்தலுக்கு முன்போ, பின்போ ஜனநாயக முறையில் போராடி அதிமுகவை மீட்டெப்போம் என தெரிவித்துள்ளார்.