Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் பீரங்கி! – நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்!

Advertiesment
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் பீரங்கி! – நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர்!
, ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (12:38 IST)
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை புரிந்துள்ள பிரதமர் மோடி உள்நாட்டு தயாரிப்பான அர்ஜுன் பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதற்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹெலிகாப்டர் மூலமாக சென்னை வந்த பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்துள்ளார். அப்போது ஆவடி தொழிற்சாலையில் தயாரான உள்நாட்டு உற்பத்தியான அர்ஜுன் பீரங்கியை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அர்ஜுன் பீரங்கி இந்திய ராணுவத்தில் முக்கிய பங்களிப்பை செலுத்தும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே மாதத்தில் பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் விசிட்! – சூடுபிடிக்கிறதா தேர்தல்!