அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தார்.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி தராமல் இருப்பது 'காழ்ப்புணர்ச்சி' காரணமாக இருக்கலாம். போக்குவரத்து நெரிசலை குறைக்க, இத்திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நெல் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகளின் நலன் கருதி, 22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இது திமுகவின் கோரிக்கை அல்ல, விவசாயிகளின் கோரிக்கை என்றார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம், கொலைகள், கொள்ளைகள் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்த அவர், முதலமைச்சர் துரிதமாக செயல்பட்டு இதை கட்டுப்படுத்தவில்லை என்றால், அது வரும் தேர்தலில் பிரதிபலிக்கும் என்று எச்சரித்தார்.
SIR பணி: வாக்காளர் பட்டியலில் திட்டமிட்டுப் பெயர் நீக்கப்பட்டால், மக்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.
அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி கூட்டணியாக இருக்கும் என்றும், தாங்கள் யாருடன் கூட்டணி என்பதை முறைப்படி அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். திமுகவினருக்கு தவெக குறித்த உறுத்தல் இருப்பதை அறிய முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.