சமீபத்தில் பிரபலமான கூமாப்பட்டியில் கீழே கிடந்த கூல்ட்ரிங்ஸை குடித்த சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ஊர் கூமாப்பட்டி. சமீபத்தில் தங்கபாண்டியன் என்பவர் வெளியிட்ட வீடியோ மூலம் இந்த ஊர் பிரபலம் ஆனது. இந்த ஊரில் ராமசாமிபுரம் இமானுவேல் முடங்கி தெருவில் வசித்து வந்தவர் வீராச்சாமி. இவரது மனைவி பஞ்சவர்ணம். தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் இவர்களுக்கு 5 வயதில் கோடீஸ்வரன் என்ற மகனும் உள்ளான்.
கோடீஸ்வரன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்துள்ளான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றொர் குழந்தையை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சிறுவன் கீழே கிடந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை எடுத்து அருந்தியதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K