Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏஏங்ங்க…! கூமாபட்டி ஒரு ஐலேண்டுங்க! பூங்கா அமைக்க முடியாதா? - அமைச்சர் துரைமுருகன் பதில்

Advertiesment
Koomapatti thangapandi

Prasanth K

, புதன், 2 ஜூலை 2025 (11:12 IST)

சமீபமாக இன்ஸ்டாகிராமில் தங்க பாண்டி என்பவரால் கூமாபட்டி என்ற கிராமம் ட்ரெண்ட் ஆன நிலையில் அங்கு பூங்கா அமைக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

 

இன்ஸ்டாகிராமில் அவ்வபோது சில விஷயங்கள் பயங்கரமாக ட்ரெண்ட் ஆகும். அப்படி சமீபமாக மிகவும் ட்ரெண்டான ஒன்றுதான் கூமாபட்டி ஐலேண்ட். விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு தாண்டி உள்ள சின்ன கிராமமான கூமாபட்டி அருகே பிளவக்கல் அணை உள்ளது. 

 

இந்த கிராமத்தை சேர்ந்த தங்கபாண்டி என்பவர் சமீபமாக “ஏங்க.. கூமாபட்டி ஒரு ஐலேண்டுங்க.. தண்ணி சர்பத் மாதிரி இருக்குமுங்க.. எல்லாரும் கூமாபட்டி வாங்க” என இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டு அது ட்ரெண்ட் ஆனது. அதை தொடர்ந்து பலர் கூமாபட்டிக்கு படையெடுத்த நிலையில் அங்கு எதிர்பார்த்தபடி சுற்றுலா செல்ல ஒன்றும் இல்லை. அதனால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

 

இந்நிலையில் கூமாபட்டியில் பிளவக்கல் அணையில் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கப்பட்டதாகவும், திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும் தங்கபாண்டி பேசியிருந்தார்.

 

கூமாபட்டியில் பூங்கா அமைக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் “எல்லா இடங்களிலும் பூங்காக்களை அமைத்துவிட முடியாது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். அவர்கள் ஆய்வு செய்து நல்ல முடிவை எடுப்பார்கள்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாதம் ரூ.8 ஆயிரம் உதவித் தொகையுடன் பட்டயப் படிப்புகள்! - தமிழக தொல்லியல் துறை அறிவிப்பு!