பெண்ணை தூக்கி தீ மிதிக்க சென்ற முதியவர்.. இருவரும் விழுந்து படுகாயம்.. அதிர்ச்சி தகவல்..!

Mahendran
வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (12:30 IST)
வேளாங்கண்ணி தீமிதி திருவிழாவில் ஒரு பெண்ணை தூக்கி தீமிதிக்க சென்ற முதியவர் தடுமாறி விழுந்ததால் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த வடக்கு பொய்கை நல்லூர் என்ற பகுதியில் இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், தீ மிதிக்க தயங்கியபடி ஒரு பெண் நின்று கொண்டிருந்த நிலையில், அந்த பெண்ணை ஒரு முதியவர் தூக்கி சென்று தீ மிதிக்க தொடங்கினார்.
 
அப்போது அவர் செல்லும் வழியில் திடீரென தடுமாறி கீழே விழுந்ததால், முதியவர் மற்றும் பெண் ஆகிய இருவரும் தீக்காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை கூடாது.. மீறினால் நடவடிக்கை: எச்சரிக்கை சுற்றறிக்கை

எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் தெரியவில்லை, நாங்கள் சொல்லி கொடுக்க தயார்: செல்வப்பெருந்தகை

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம். இரு நாடுகளும் பேசி தீர்த்து கொள்ளும்: அமெரிக்கா

ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்திக்கவில்லை.. வதந்திகள் பரப்பப்படுகிறது.. செங்கோட்டையன் விளக்கம்

மீண்டும் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. ஃபார்மா பங்குகள் பயங்கர சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments