Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளத்தில் கவிழ்ந்த நடிகர் ஜோஜூ ஜார்ஜின் ஜீப்! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

Advertiesment
Kerala

Prasanth K

, திங்கள், 22 செப்டம்பர் 2025 (15:31 IST)

பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்க் ஓட்டிய ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மலையாள சினிமாவில் ரெட்டா உள்ளிட்ட பல படங்கள் மூலம் பிரபலமானவர் ஜோஜூ ஜார்ஜ். இவர் தமிழில் ஜகமே தந்திரம், ரெட்ரோ, தக் லைஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையேயும் புகழ் பெற்றவராக உள்ளார்.

 

இந்நிலையில் தற்போது ஜோஜூ ஜார்ஜ் ’வரவு’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கேரள மாநிலம் மூணாறில் நடந்து வருகிறது. அப்போது படப்பிடிப்பின்போது ஜோஜூ ஜார்ஜ் ஓட்டிச் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

இதில் ஜோஜூ ஜார்ஜும், அவருடன் பயணித்தவர்கள் 5 பேரும் விபத்திற்குள்ளான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!