பிரபல அசாமிய பாடகரும் இசையமைப்பாளருமான ஸுபீன் கார்க், சிங்கப்பூரில் சாகச விளையாட்டு ஒன்றில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
52 வயதான ஸுபீன் கார்க், அசாமிய, ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். குறிப்பாக, "யா அலி" என்ற பாடல் இவருக்கு பரவலான புகழை பெற்றுத் தந்தது.
சிங்கப்பூரில் நடைபெறும் வடகிழக்கு திருவிழாவில் பங்கேற்பதற்காக அங்கு சென்றிருந்த ஸுபீன், செப்டம்பர் 18ஆம் தேதி இரவு ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கினார். உயிருக்கு போராடிய அவரை சிங்கப்பூர் காவல்துறையின் மீட்புப்படையினர் உடனடியாக மீட்டனர். ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் பாராகிளைடிங் சாகசத்தின்போது விபத்தில் சிக்கியதாக சில தகவல்கள் கூறுகின்றன.
ஸுபீனின் திடீர் மரணம், அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.