Publish Date: Sat, 14 May 2022 (08:23 IST)
Updated Date: Sat, 14 May 2022 (08:37 IST)
வெளி மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கனமழையால் தக்காளி வரத்து குறைந்த நிலையில் கிலோ 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்றது. ஆனால் கடந்த மாதம் இந்த நிலைமை தலைகீழாக மாறியது. விவசாயிகள் பலரும் தக்காளி பயிர் செய்திருந்த நிலையில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்தது. இந்நிலையில், தற்போது பெய்த திடீர் மழை காரணமாக அந்த பகுதிகளில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்துள்ளதாம். 2 வாரங்களுக்கு முன்பு 1 கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.