Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நூல் விலை உயர்வுக்கு தீர்வு காண...மத்திய அமைச்சரிடம் பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் மனு

vv senthilkumar
, திங்கள், 9 மே 2022 (22:41 IST)
மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்கியும் பயனுமில்லை ? நூல் விலை உயர்வுக்கு தீர்வு காண வேண்டி மத்திய அமைச்சரிடம் கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் மனு.
 
இன்று கோவைக்கு வருகைதந்த மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை, கரூர் மாவட்ட பாஜக சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றதோடு, கரூர்  மாவட்ட அளவில் மிகவும் பிரதானமான ஜவுளித்தொழிலுக்கு தேவையான நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றது. ஆகவே  மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்கியது. ஆனால், கரூரில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் நுால்களின் விலை, 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. குறைந்தது மூன்று மாதங்களுக்கு, நுால் விலை ஒரே சீராக இருக்க வேண்டும், கரூரில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், 8,000 கோடி ரூபாய் அளவுக்கு வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்து, 4,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. ஆனால், கடந்த சில மாதங்களாக, நுால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும், ஆகவே, இத்தொழிலை நம்பி கரூர் மாவட்ட அளவில் மட்டுமில்லாமல், கரூர் மாவட்டத்திற்கு வந்து பணியாற்றி வரும் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைகின்றனர். ஆகவே, ஜவுளித்தொழிலில்  தொழில் துறை சந்திக்கும் சவால்கள் குறித்து  மத்திய அமைச்சரிடம் கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் கேட்டறிந்தார். மேலும், கரூர் ஜவுளித்தொழில் துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தொழில் மேம்பாட்டுக்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உறுதியளித்தார். இதையடுத்து மேலும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆர்வமுடன் விசாரித்தார். மேலும், இந்த சந்திப்பிற்கு உறுதுணையாக இருந்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் கரூர் மாவட்ட மக்கள் சார்பிலும், கரூர் மாவட்ட பாஜக சார்பிலும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை எம்பி கொலை எதிரொலி: நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து!