Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்வு: சென்னையின் விலை என்ன?

பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்வு: சென்னையின் விலை என்ன?
, ஞாயிறு, 6 ஜூன் 2021 (06:45 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டிவிட்ட நிலையில் விரைவில் தமிழகத்திலும் ரூ.100ஐ தாண்டிவிடும் என்றும் கூறப்பட்டு வந்தது 
 
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து 96.47 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் சென்னையில் இன்று டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ.90.66 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருப்பதால் டீசல் விலை ஏற்கனவே ரூ90ஐ தாண்டிவிட்ட நிலையில் விரைவில் சென்னையில் பெட்ரோல் விலையில் ரூ.100ஐ தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

17.37 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!