Publish Date: Fri, 04 Jun 2021 (13:04 IST)
Updated Date: Fri, 04 Jun 2021 (13:08 IST)
கொரோனா காரணமாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.36,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,585-க்கு விற்பனை ஆகிறது.