Publish Date: Thu, 03 Jun 2021 (11:09 IST)
Updated Date: Thu, 03 Jun 2021 (13:23 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து ரூ.37,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,655க்கும், சவரன் ரூ.37,240க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.