Publish Date: Thu, 03 Jun 2021 (10:29 IST)
Updated Date: Thu, 03 Jun 2021 (10:34 IST)
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.37,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.4,655க்கு விற்பனை செய்யப்படுகிறது.