Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டின் முதல் பெண் அர்ச்சகர்! – ட்ரெண்டாகும் சுஹாஞ்சனா!

தமிழ்நாட்டின் முதல் பெண் அர்ச்சகர்! – ட்ரெண்டாகும் சுஹாஞ்சனா!
, ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (13:19 IST)
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தில் பெண் ஒருவர் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது முதல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை மீட்பது, தமிழில் அர்ச்சனை என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் பலர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர், இதற்கு பலரும் ஆதரவையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓதுவார் பணிக்கு 27 வயதான சுஹாஞ்சனா என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் முதன்முறையாக பெண் ஓதுவாராக இவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் 19ம் தேதி வரை மழை தொடரும்! –வானிலை ஆய்வு மையம்!