கோவை விமான நிலையம் வந்த அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி வேலுமணிக்கு கொரோனா விதிமுறைகளை மீறி வரவேற்பு அளித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை எதிர்த்து எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுகவினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று எஸ்.பி.வேலுமணி விமானம் மூலமாக கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அதிமுகவினர் தடபுடலான வரவேற்பு அளித்தனர், இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாக தொற்று நோய் பரவல் சட்டத்தின்படி அதிமுக எம்.எல்.ஏக்கள் எஸ்.பி வேலுமணி, கே.ஆர் ஜெயராமன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.