Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி செய்யலாமா? செந்தில் பாலாஜிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!

Siva
வியாழன், 25 செப்டம்பர் 2025 (17:52 IST)
கரூரில் காங்கிரஸ் பெண் நிர்வாகி ஒருவர் திமுகவில் இணைந்தது தொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவிட்ட ட்வீட், கூட்டணி கட்சிகளுக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, செந்தில் பாலாஜியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் கவிதா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையை கண்டு ஈர்க்கப்பட்டு, திமுகவில் இணைந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், இந்த பதிவுவுக்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடுமையாக கண்டித்தார். இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது என்றும் ஜோதிமணி தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
 
மேலும், இந்த விவகாரத்தை மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்து செல்வார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
 
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, "கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு, செந்தில் பாலாஜி இப்படி செய்திருக்கக் கூடாது. நான் உடனடியாக இந்த விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன். அதன் பிறகு, அந்த பதிவு நீக்கப்பட்டது.
 
இத்தகைய செயல்கள் முதலமைச்சருக்கு தேவையற்ற நெருக்கடியை உருவாக்கும். எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மிகவும் பெருந்தன்மையுடன் இந்த விவகாரத்தை கையாண்டுள்ளார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவருக்குரிய மரியாதையும் மதிப்பும் அளிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரச்சாரத்திற்கு அனுமதி வாங்க வேண்டாம்! எல்லாத்தையும் நிறுத்தும் விஜய்? - நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

கரூரில் பாஜக தன் விளையாட்டை தொடங்கிவிட்டது! - திருமாவளவன் குற்றச்சாட்டு!

மடகாஸ்கரிலும் பரவியது Gen Z போராட்டம்! ஆட்சி கவிழ்ப்பு! வானில் பறக்கும் Straw hats கொடி!

பாலியல் சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி செல்போனில் விமான பணிப்பெண்கள் புகைப்படங்கள்: அதிர்ச்சி தகவல்..!

கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி தான் காரணம்.. லட்டர் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த தவெக நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments