Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் இடஒதுக்கீடு: பீகார் தேர்தலுக்காக ராகுல் காந்தி கொடுத்த வாக்குறுதி

Advertiesment
ராகுல் காந்தி

Mahendran

, வியாழன், 25 செப்டம்பர் 2025 (14:04 IST)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிகார் சட்டமன்ற தேர்தலையொட்டி முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
 
அதில் இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்படும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் “பாஜக எத்தனை பொய்யான பிரசாரங்களை செய்தாலும், பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடி மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பிகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை வலுப்படுத்தவும், அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம்,” என்று கூறியுள்ளார்.
 
“கல்விதான் அவர்களுக்கு முன்னேற்றத்துக்கான மிகப்பெரிய வழி. இனி தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் பாதியளவு ஒபிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வழங்கப்படும். இது வெறும் கல்விக்கான போராட்டம் மட்டுமல்ல, சமத்துவம் மற்றும் சுயமரியாதைக்கான போராட்டம்,” என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிஜிட்டல் அரெஸ்ட்: ஓய்வூதிய பணம் ரூ.23 கோடியை ஒரே நாளில் இழந்த வங்கி அதிகாரி.!