திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

Bala
வியாழன், 4 டிசம்பர் 2025 (16:47 IST)
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தமிழக அரசு தடை விதித்தது. அந்த தடையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அங்கு தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கார்த்திகை தீபமான நேற்று அந்த தீபம் ஏற்ற போலீசார் அனுமதிக்கவில்லை. ஒருபக்கம் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்ற வேண்டும். CRPF வீரர்களுடன் சென்று மனுதாரர் திருப்பரங்குன்றம் சென்று தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார்.

 
இதைத்தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பினர் பலரும் நேற்று திருப்பரங்குன்றம் சென்று மலை உச்சியில் தீபம் ஏற்ற முயற்சி செய்தார்கள். இதற்கிடையில், நீதிபதியின் தீர்ப்பை ரத்துசெய்யக்கோரி அரசு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக சொல்லி  இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் தடுத்தார்கள். 
 
இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலரையும் போலீசார். கைது செய்தார்கள். அரசு தொடர்ந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்தநிலையில் ஜி.ஆர் சுவாமிநாதனின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி அரசு சார்பில் கொடுக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
 
இரட்டை நீதி அரசர்கள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில், தமிழக அரசின் மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்ற உத்தரவு கடைபிடிக்கப்படவில்லை என்பதாலேயே மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மாநில அரசு கடமையை செய்ய தவறியதாலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசு ஏதோ உள்நோக்கத்துடன் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருக்கிறது. வழக்கை மீண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிப்பார்’ என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments