புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி இல்லை.. தவெகவின் மாற்று ஏற்பாடு இதுதான்..

Siva
வியாழன், 4 டிசம்பர் 2025 (16:36 IST)
புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அவர்களின் 'ரோடு ஷோ'  எனப்படும் சாலை பேரணி நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. ஆனால், புதுச்சேரி அரசாங்கம் இந்த சாலைப் பேரணிக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
 
இதனை தொடர்ந்து, புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
தமிழகத்தை போலவே புதுவையிலும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் புதுவையிலும் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றன.
 
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சாலை பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், புதுவை அரசு தரப்பில் இருந்து அனுமதி அளிக்கப்படாததால், தற்போது பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
வரும் டிசம்பர் 9ஆம் தேதி புதுச்சேரி உப்பளம் துறைமுகம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு, காவல்துறை தலைமை அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மனு தற்போது அதிகாரிகளின் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி

16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி..!

புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

சென்னையில் மீண்டும் திடீர் மழை: நம்பி துணிகளைக் காயவைக்காதீர்கள்..! தமிழ்நாடு வெதர்மேன்..!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்": திருமாவளவன் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments