Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது : முட்டுக்கொடுக்கும் குருமூர்த்தி

Advertiesment
கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது : முட்டுக்கொடுக்கும் குருமூர்த்தி
, புதன், 8 ஆகஸ்ட் 2018 (07:53 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் புதைக்க அனுமதிக்கக்கூடாது என துக்ளக் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.30 மணிக்கு காலமானார். இவரது உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு பின்புறம் அடக்க செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி, கிண்டி காமராஜர் நினைவிடத்தில் அவரை உடலை புதைக்க அரசு நிலம் ஒதுக்கியது.
 
இது தொடர்பாக நேற்று இரவு நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு இன்று காலை 8.30 மணிக்கு மறு விசாரணைக்கு வர இருக்கிறது. மேலும், மெரினாவில் தலைவர்களின் உடலை புதைக்கக் கூடாது என வழக்கு தொடர்ந்திருந்த அனைவரும் அந்த மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். எனவே, அரசு தரப்பில் பதில் தர போதிய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இதுபற்றி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த துக்ளக் குருமூர்த்தி “ முதல்வர்களுக்கு மட்டுமே மெரினாவில் இடம் தரவேண்டும். முன்னாள் முதல்வர்களுக்கு காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்ய இடம் தருவதே மரபு. அதனால், கலைஞருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தரக்கூடாது” என அவர் கூறினார். 
 
இவரின் கருத்து திமுக ஆதரவாளர்களுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைஞரின் மரணத்தை ஏற்க முடியவில்லை - கதறி அழும் விஜயகாந்த்