Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக கோரிக்கை : இதனால்தான் எதிர்க்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி?

Advertiesment
Edapadi palanisamy
, செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (16:30 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள சூழ்நிலையில், திமுகவின் கோரிக்கையை ஏற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடம் பிடித்து வருவதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

 
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் குடும்பத்தினர் மருத்துவமனையில் கூடியுள்ளனர். திமுக தொண்டர்கள் ஏராளமானோர் மருத்துவமனை வாசலில் கூடியுள்ளனர். 
 
அவருக்கு ஏதேனும் நேர்ந்தால், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே அவரின் சமாதி அமைய வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை மட்டுமல்ல. அவரது குடும்பத்தினரின் ஆசையும் அதுதான்.  
 
நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகிய மூன்று பேரும் ஆகியோர் சந்தித்து இதுபற்றி கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், பிடி கொடுக்காத அவர், சட்டத்தில் இடம் இருந்தால் பார்க்கலம் எனக் கூறி அனுப்பி வைத்தாராம். அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகியோர் கூறியும் எடப்பாடி ஏற்கவில்லையாம். இதற்கு பின்னால் பாஜக இருப்பதாக திமுக தரப்பு கருதுவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்நிலையில், தன் மீது திமுக அளித்த ஊழல் புகாரை சுட்டிக் காட்டி / மனதில் வைத்துதான் 5 முறை முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு மெரினாவில் இடம் மறுப்பது, காலத்தின் கோலம் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு நிகழ்வுகளை தள்ளி வைய்யுங்கள்: முதல்வரிடம் ஸ்டாலின் கோரிக்கை!