Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதி காலமானார்: செய்திகள் உடனுக்குடன்

கருணாநிதி காலமானார்: செய்திகள் உடனுக்குடன்
, செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (17:39 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் அஞ்சலி

கருணாநிதியின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் திமுகவினருக்கு நடிகர் அஜித் ஆழ்ந்த இரங்கல் 

கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் ,மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி

கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலித்தினார் நடிகர் ரஜினிகாந்த்

அந்த மாமனிதருக்கு மெரினாவில் இடம் கொடுங்கள் - ராகுல்காந்தி வேண்டுகோள்

மெரினாவில் இடம் கொடுங்கள் கருணாநிதிக்காக கெஞ்சும் ரஜினிகாந்த்

ஏராளமான தொண்டர்கள் சூழ ஊர்ந்து செல்கிறது ஆம்புலன்ஸ்

காவேரி மருத்துவமனையிலிருந்து கருணாநிதியின் உடல் கோபாலபுரத்திற்கு எடுத்துக்கொண்டு செல்லப்படுகிறது

ஆழ்வார்பேட்டையில் பேரிகார்டுகள் உடைப்பு மெரினாவில் இடம் தர மறுத்ததால் திமுக தொண்டர்கள் கொந்தளிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் இரங்கல்

கலைஞரின் மரணம்கூட கம்பீரமானது கவிப்பேரரசு வைரமுத்து

கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியிடம் வேண்டுகோள்

மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் திமுக தொண்டர்கள் சாலை மறியல்

கோபாலபுரம் இல்லத்தில் இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1.00 மணி வரை குடும்பத்தினர் அஞ்சலிக்கு கருணாநிதி உடல் வைக்கப்படும்.

சிஐடி காலணி வீட்டில் நாளை காலை 1.30 மணி முதல் 3.30 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். 

அதிகாலை 4 மணி அளவில் ராஜாஜி அரங்கில் கருணாநிதி உடல் பொதுமக்கள் மற்றும் அரசியில கட்சியினர், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மெரினாவிற்கு பதிலாக சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதான சாலை முகப்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே காந்தி மண்டபம் அருகில் 2 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கீடு செய்ய தயார் எனக் கூறியுள்ளது தமிழக அரசு.

மெரினாவில் நல்லடக்கம் செய்ய சட்ட சிக்கல்கள் இருப்பதால் அங்கு இடம் ஒதுக்க முடியவில்லை தமிழக அரசு விளக்கம்.

கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய முடியாது தமிழக அரசு கைவிரிப்பு

தமிழகத்தில் நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 7 நாட்கள் துக்க அனுசரிப்பு


கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய அண்ணா நினைவிடம் அருகே இடம் கேட்கப்பட்டுள்ளது துரைமுருகன் பேட்டி

கருணாநிதியின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது பொன்.ராதாகிருஷ்ணன்

கருணாநிதி மறைவைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன் திருமாவளவன் வருத்தம்

நடக்கூடாதது நடந்து இழக்கக்கூடாததை இழந்துவிட்டோம்  கீ.வீரமணி வருத்தம்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார்


திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகம் இரங்கல்

திமுக தொண்டர்கள் கட்டுபாடு காக்க வேண்டும் ஸ்டாலின் வேண்டுகோள்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்


திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை சென்னை வருகை

காவேரி மருத்துவமனை முழுவதும் அழுகுரல்

கருணாநிதியை போல் ஒரு அரசியல் தலைவர் யாரும் இருக்க முடியாது தமிழிசை சௌந்தர்ராஜன்

நாளை பொது விடுமுறையை அறிவித்தது புதுச்சேரி அரசு

திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு இரங்கல்


திமுக கொடிகள் அரை கம்பத்தில் தொங்க விடப்பட்டுள்ளன

திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்


திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

எவ்வளவு சிகிச்சை அளித்தபோதிலும் கருணாநிதியை காப்பாத்த முடியவில்லை காவேரி மருத்துவமனை நிர்வாகம் வருத்தம்

திமுக தலைவர் உடல் நலக்குறைவால் 6.10 மணிக்கு காலமானார் காவேரி மருத்துவமனை அறிவிப்பு

கருணாநிதியின் கோபாலபுரம், சிஐடி காலனி இல்லத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொண்டர்கள் சாரை ... சாரையாக ... கண்ணீர் தழும்ப மருத்துவமனை நோக்கி படையெடுப்பு .
முதலமைச்சரை சந்தித்த திமுக செயல்  தலைவர் ஸ்டாலின் காவிரி மருத்துவமனைக்கு திரும்பும்போது கண்ணீர் விட்டார்

கலைஞர் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

கருணாநிதி மோசமானதையடுத்து, மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் அழுது கொண்டே செல்கின்றனர்..
 
மருத்துவமனையைச் சுற்றிலும் அதிரடி போலீஸார் குவிப்பு 

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை முதல் நாளை வரை அனைத்து காட்சிகளும் ரத்து.

மருத்துவ மனையில் இருந்து கருணாநிதி மகள் செல்வி உள்பட குடும்பத்தினர்கள் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றனர்.
 
காவேரி மருத்துவமனைக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் வருகை.

கோபாலபுரம் இல்லத்திலிருந்து கருணாநிதியின் கார் வெளியே எடுக்கப்பட்டுள்ளது

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி மற்றும் குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை.


சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
மருத்துவ மனை கதவுகள் மூடப்பட்டன.
 
மருத்துவமனை வளாகத்திற்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை..
மாநகராட்சி அதிகாரிகள், மின்வாரிய, அதிகாரிகள் துப்பரவு பணியாளர்கள் தற்போது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
ராஜாஜிஹால் சென்னை போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
 
அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளையும் உடனடியாக சென்னைக்கு வரடிஜிபி உத்தரவு
 
கருணாநிதி வீடு அமைந்துள்ள கோபாலபுரம் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது..
 
காவேரி மருத்துவமனையில்  திமுக தலைவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாலும், தொடர்ந்து கவலைக்கிடம் அடைந்து வருவதால் மருத்துவமனை வளாகத்தில் இனிமேல் யாருக்கும் அனுமதியில்லை என அறிவிப்பு
 
முதல்வர் பழனிசாமியுடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை
 
தி.மு.க மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் காவேரி மருத்துவமனைக்கு வருகை
 
காவேரி மருத்துவமனைக்கு தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் வருகை.
 
திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் காவேரி மருத்துவமனைக்கு வருகை
 
சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் காவேரி மருத்துவமனை வளாகத்தில் குவிப்பு
 
திமுக தலைவர் கருணாநிதி மிக மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை தகவல்
 
அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் சென்னை வர டிஜிபி உத்தரவு
 
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சந்திப்பு
 
ஸ்டாலின் சந்தித்து சென்ற நிலையில் முதலமைச்சருடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சந்திப்பு
 
முதல்வர் பழனிசாமி இல்லத்திற்கு விரைந்தார் தலைமை செயராளர் கிரிஜா வைத்திய நாதன்.
 
முதல்வர்  பழனிசாமியுடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை
 
தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி உத்தரவு.
 
உறுதிபடாத" தகவல்களை "சமூக ஊடகங்களில்" பொதுமக்கள் பதிவிட வேண்டாம்....காவல்துறை எச்சரிக்கை...
 
அரசு மதுபான கடைகள் அனைத்தும் மாலை 6 மணிக்கு  மூட உத்தரவு

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி கவலைக்கிடம் - திமுக தொண்டர்கள் கதறல்