Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக கெத்து காட்டிய இளைஞர்கள்: ரயில் மோதி துண்டுதுண்டாக சிதறிய கொடூரம்

three dead
, வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (07:29 IST)
இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக கெத்து காட்டிய இளைஞர்கள்
இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக கெத்து காட்டிய மூன்று இளைஞர்கள் ரயில் மோதி துண்டு துண்டாக சிதறி சம்பவம் செங்கல்பட்டு அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
செங்கல்பட்டு அருகே மோகன், பிரகாஷ் மற்றும் அசோக்குமார் ஆகிய 3 பேர் தண்டவாளத்தில் நின்றபடி மாறிமாறி வீடியோ எடுத்துள்ளனர் 
 
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து கெத்து காட்டுவதாக அவர்களது திட்டமாக இருந்துள்ளது
 
இந்த நிலையில் திடீரென தண்டவாளத்தில் ரயில் வருவது கூட தெரியாமல் வீடியோ எடுத்ததால் 3 பேர்களும் ரயில் மோதிய வேகத்தில் துண்டாக சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர் 
 
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் இளைஞர்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றும் உயர்ந்ததா பெட்ரோல், டீசல் விலை: சென்னை விலை நிலவரம்