Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென் மாவட்ட மக்களுக்காக இரண்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

train
, புதன், 6 ஏப்ரல் 2022 (08:05 IST)
தென் மாவட்ட மக்களின் வசதிக்காக இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதுகுறித்த விபரம் பின்வருமாறு:
 
முதல் சிறப்பு ரயில்: சென்னை தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் 
 
ஏப்ரல் 22-ந்தேதி முதல் ஜூன் 24-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். 
 
மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து வாராந்திர சிறப்பு ரெயில் 24-ந் தேதி முதல் ஜூன் 26-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.  
 
2வது சிறப்பு ரயில்: தென்காசி வழியாக நெல்லை-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்:
 
ஏப்ரல் 17-ந் தேதி முதல் ஜூன் 26-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். 
 
மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரெயில் வருகிற 18-ந் தேதி முதல் ஜூன் 20-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு மதுரைக்கும், 10.35 மணிக்கு நெல்லைக்கும் வந்து சேரும்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அமைச்சருடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு: மேகதாது திட்டத்திற்கு அனுமதியா?