கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தெருநாய் கடித்ததில், மூன்று வயது குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தை சேர்ந்த தம்பதியரின் மகனான சத்தியம், செப்டம்பர் 1-ம் தேதி தெருநாய் கடித்ததால் படுகாயமடைந்தான். நாய் கடித்ததால் ஏற்பட்ட காயங்களுக்கு 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றான். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று மாலை மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
குழந்தையின் இறப்பு, நாய் ஆர்வலர்கள் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. "தெருநாய்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. பலமுறை புகார் அளித்தும் நாய் ஆர்வலர்களின் எதிர்ப்பால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நாய் ஆர்வலர்களுக்கு மனசாட்சியே இல்லையா?" என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக, அரசு உடனடியாக தலையிட்டு, தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.