Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை! குடும்பத்திற்கு ரூ.90 கோடி இழப்பீடு!

Advertiesment
Japan

Prasanth K

, செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (09:41 IST)

ஜப்பானில் இளம்பெண்ணை நாய் என மேனேஜர் திட்டியதால் அவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜப்பானின் டோக்கியா நகரில் டியுபி என்ற அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சடோமி என்ற 25 வயது இளம்பெண் கடந்த 2021 முதலாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பணி ஒழுங்காக செய்யவில்லை என அவரை அழைத்து திட்டிய கம்பெனி மேனேஜர் மிட்சுரு சுகாய், அந்த பெண்ணை நாய் என சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

 

இதனால் கடந்த 2022ல் விடுப்பில் சென்ற சடோமி, தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கோமா நிலைக்கு சென்றார். அதன்பின்னர் கடந்த 2023ல் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு அவர் பணிபுரிந்த நிறுவனமும், மேனேஜருமே காரணம் என பெண்ணின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இளம்பெண்ணை தற்கொலை அளவிற்கு அழுத்தத்திற்குள் தள்ளிய நிறுவனம், இளம்பெண் குடும்பத்திற்கு 150 மில்லியன் யென் (ரூபாயில் 90 கோடி) இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் மேனேஜர் மிட்சுரு சுகாயை பதவியை விட்டு நீக்கிய அந்நிறுவனம், சடோமியின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை எதிரொலி: இன்று மீண்டும் உயரும் பங்குச்சந்தை..!