தமிழக முதல்வர் ஸ்டாலினை திடீரென சந்தித்தது ஏன்? திருமாவளவன் விளக்கம்..!

Mahendran
செவ்வாய், 14 அக்டோபர் 2025 (15:05 IST)
சாதி பெயர்கள் கொண்ட பெயர்களை மாற்றியமைத்து அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
 
"எந்தப் பெயரும் சாதி அடிப்படையிலிருக்க கூடாது என்பதே எங்கள் கொள்கை" என்று கூறிய திருமாவளவன், முதல்வரின் அரசாணைக்கு நன்றி கூறினார். மேலும், சில பெயர்களில் உள்ள 'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்றுவது குறித்து கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.
 
கோவை பாலத்துக்கு ஜி.டி. நாயுடு என்று பெயரிடுவது குறித்து பேசிய அவர், அது "சாதியை வளர்க்காது என நம்புகிறோம்" என்றும், பாலத்துக்குச் சுருக்கமாக 'ஜி.டி.' என்று மட்டும் பெயரிட்டால் இன்னும் மகிழ்ச்சி அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments