நடிகர் விஜய்யின் பிரசார பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "விஜய்க்கு மட்டுமல்ல, நடிகர் வடிவேலு வந்தால் கூட கூட்டம் வரும்; கூட்டத்தை வைத்து ஒரு தேர்தல் வெற்றியை கணிக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
திருமாவளவன் மேலும் கூறுகையில், "விஜய் இப்போதுதான் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். ஆனால், திமுக தலைமையிலான கூட்டணி முழு வடிவம் பெற்று மிகவும் வலுவாக உள்ளது. இந்த கூட்டணியை வீழ்த்துவதற்காக பல தரப்பிலிருந்து ஒலிக்கும் குரல்களில் ஒன்றுதான் விஜய்யின் குரல்." என்று குறிப்பிட்டார்.
மேலும், "திமுக கூட்டணியை பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு விஜய் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பில்லை" என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.
திமுக போன்ற ஒரு பெரிய கூட்டணி அணியை ஒரு தனி கட்சி மட்டும் வீழ்த்தி விடுவதற்கு வாய்ப்பே இல்லை" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.