தமிழகம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள மதுபான ஆலைகளில் இருந்து பிரசாந்த் கிஷோருக்கு நிதி வருவதாக பாஜக எம்.பி. சஞ்சய் ஜெயஸ்வால் கூறியுள்ள குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சய் ஜெயஸ்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரசாந்த் கிஷோர், பாஜகவின் வாக்குகளை பிரிப்பதற்காக சதி வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், தமிழகம் மற்றும் தெலங்கானா மதுபான ஆலைகளில் இருந்து அவருக்கு பெரிய அளவில் பணம் வருவதாகவும், அவரது கட்சியின் அடிப்படை கொள்கையே மக்களை ஏமாற்றி, சட்டவிரோதமாக நிதி திரட்டுவதுதான் என்றும் அவர் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
பாஜக எம்.பி.யின் இந்தத் தாக்குதலுக்குப் பிரசாந்த் கிஷோர் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார். "சஞ்சய் நடத்தும் பெட்ரோல் பங்குகளில் போலி பெட்ரோல் பில் தயாரிக்கப்படுகிறது. அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் இந்த மோசடி குறித்து புகார் அளித்துள்ளனர்," என்று அவர் கூறியுள்ளார். இந்த பதிலடி, இருதரப்புக்கும் இடையே வார்த்தை போரைத் தீவிரப்படுத்தியுள்ளது.