பீகார் மாநிலம் சசாரமில் நடைபெற்ற 'வாக்காளர் உரிமை யாத்திரை'யின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, "தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என்பது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியும்" என்று பேசினார்.
ராகுல் காந்தி மேலும் கூறுகையில், "முன்னர் வாக்குகள் எப்படி திருடப்படுகின்றன என்பது நாட்டிற்கு தெரியாது. ஆனால், நாங்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வாக்குகள் எப்படித் திருடப்படுகின்றன என்பதைத் தெளிவாக விளக்கினோம்" என்று தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல்களில் முறைகேடுகள் நடப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து இவ்வாறு பேசியுள்ளார்.